வட்டிக்கு வட்டி வசூலிப்பதில் மெரிட் பின்பற்றக்கூடாது - உச்சநீதிமன்றம்...

டன் தாமத சலுகையில் வட்டிக்கு வட்டி வசூலிப்பதில் மெரிட் கூடாது என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.



கொரோனா நெருக்கடி காரணமாக, கடன் தவணைகளை தாமதமாக திருப்பிச் செலுத்தும் சலுகையின் பலன்கள் மக்களுக்கு கிடைப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டுமென்றும், அந்த சலுகையை அனுபவிக்கும் மக்களிடம், வட்டிக்கு வட்டி வசூலிப்பதில் மெரிட் அடிப்படையைப் பின்பற்றக்கூடாது என்றும் கூறியுள்ளது உச்சநீதிமன்றம்.


மேலும், அனைத்து விஷயங்களையும் வங்கிகளே முடிவுசெய்யும் வகையில் அரசு விட்டுவிடக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.


தாமத வட்டித் தொகைக்கு வங்கிகள் கட்டணம் வசூலிக்குமா? என்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது உச்சநீதிமன்றம்.


இந்த விஷயத்தில் முடிவெடுக்க, ரிசர்வ் வங்கி, நிதியமைச்சகம் ஆகியவற்றுக்கு கூடுதல் அவகாசமும் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.


கொரோனா நெருக்கடி காரணமாக, கடனாளர்களின் மாதாந்திர நிலுவைத் தொகை செலுத்துவதை நிறுத்தி வைக்கும் சலுகையை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்க, வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.