திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாத சிறப்பு தரிசன டிக்கெட் இன்று வெளியீடு.


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் எட்டாம் தேதி முதல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் தினமும் 6 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 9 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் நாளொன்றுக்கு 1000 விஐபி தரிசன டிக்கெட்டுகள் வரை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஜூலை மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் தேவஸ்தானம் இன்று வெளியிடுகிறது. அதேபோல் ஜூலை 1ஆம் தேதிக்கான இலவச தரிசன டிக்கெட் நாளை முதல் திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், அலிபிரி, விஷ்ணு நிவாசம் ஆகிய இடங்களில்  வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு 9 ஆயிரம் சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வரும் நிலையில், இலவச தரிசன டிக்கெட் 6 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வருவது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.