கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால், முழுஊரடங்கை விரிவுபடுத்துவது குறித்து அரசு பரிசீலனை என தகவல்.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருவதைத் தொடர்ந்து 19 முதல் 30 ஆம் தேதி வரை 12 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மேலும், மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவலின் தீவிரம் அதிகரிப்பதால் சம்மந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கேற்ப அப்பகுதிகளில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.