பூட்டை உடைத்து திருட முயன்றவர்கள் கைது. 


திருப்பூர் மாநகர திருமுருகன்பூண்டி காவல் நிலைய ரோந்து காவலர் திரு.மதன்குமார் மற்றும் திரு.மகேஸ்வரன் ஆகியோர் தோட்டத்து பாளையம் பகுதியில் ரோந்து பணியை மேற்கொள்ளும்போது, ஏ.பி.எஸ் அகாடமி ஸ்கூல் அருகிலுள்ள தங்கம் ஸ்விங் மிஷின் கம்பெனிக்கு அருகில் சந்தேகப்ப்டும்படியாக நின்றுகொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, அவர்கள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினகரன் என்பது தெரியவந்தது. அவர்கள் அந்தப் பகுதியிலுள்ள சரண்யா மளிகை கடை மற்றும் சுவிங் மிஷின் ஆகிய கடைகளை உடைத்து திருட முயற்சித்தது தெரியவந்தது. திருட  முயன்ற இரு நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.