கிரேஸி மோகன் முதலாம் ஆண்டு நினைவு தினம்!

   


     தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றியவர். இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றியவர். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்தார். அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றினார். முழுக்கவே நகைச்சுவையாக எழுதுவதில் பெயர் பெற்றவர்.           


ஆரம்ப காலம் வாழ்க்கை:
      எஸ். வி. சேகர் அவர்களின் நாடகமான "கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்" என்ற நாடகத்தின் மூலம் 1976இல் அறிமுகமானார் மோகன். அந்த நாடகம் பெறும் வரவேற்பைப் பெற்றதால் 'கிரேசி' என்ற அடைமொழியுடன் 'கிரேசி' மோகன் என்று அழைக்கப்பட்டார்.
                         இல. கணேசன் அவர்களைத் தலைவராகக் கொண்ட பொற்றாமரை கலை இலக்கிய அமைப்பு கிரேஸி மோகனின் அந்த நாடகத்தைத் தன் பதினான்காம் ஆண்டு விழாவில் மேடையேற்றியது.


       ஒரே நாடகத்தின் உள்ளே பல நாடகங்களாக அந்த நாடகம் வடிவமைக்கப் பட்டிருந்தது. நாடக மேடையில் ஒரு புதுமை அது. `சாக்லேட் கிருஷ்ணா, மீசையானாலும் மனைவி` உள்ளிட்ட கிரேஸியின் நாடகங்களிலிருந்து செதுக்கிய மிக சுவாரஸ்யமான காட்சிகள் அடுத்தடுத்து மேடையில் நடிக்கப்பட்டன.


 



        கிரேஸியின் மிகக் கூர்மையான வசனங்கள். மாது பாலாஜியின் அட்டகாசமான நடிப்பு. மற்ற நடிகர்கள் அதற்கு ஈடுகொடுத்து நடித்த விதம். எஸ்.பி. காந்தனின் கவனமான இயக்கம். எல்லாம் சேர்ந்த மிகச் சிறந்த கூட்டு முயற்சி வெற்றியடையக் கேட்பானேன்? பார்வையாளர்கள் சிரிப்பலையில் மூழ்கினார்கள்.
            சங்கப் பாடல்களின் கீழே `வயலும் வயல்சார்ந்த இடமும், மலையும் மலை சார்ந்த இடமும்` என்றெல்லாம் குறிப்பிடுவார்கள். அதுபோல் கிரேஸி மோகன் என்றாலே `சிரிப்பும் சிரிப்பு சார்ந்த இடமும்` என்பது பொருள்
     


அவர் பணியாற்றிய படங்கள்:
• பொய்க்கால் குதிரை (1983)
•கதாநாயகன் (1988)
•அபூர்வ சகோதரர்கள் (1989)
•மைக்கேல் மதன •காமராஜன் (1990)
•உன்னைச் சொல்லி •குற்றமில்லை (1990)
•இந்திரன் சந்திரன் (1990)
•சின்ன மாப்ளே (1993)
•மகளிர் மட்டும் (1994)
•வியட்நாம் காலனி (1994)
•சின்ன வாத்தியார் (1995)
•எங்கிருந்தோ வந்தான் (1995)
•சதி லீலாவதி (1995)
•அவ்வை சண்முகி (1996)
•மிஸ்டர் ரோமியோ (1996)
•ஆஹா (1997)
•அருணாச்சலம் (1997)
•ரட்சகன் (1997)
•சிஷ்யா (1997)
•தேடினேன் வந்தது (1997)
•காதலா காதலா (1998)
•கண்ணோடு காண்பதெல்லாம் (1999)
•என்றென்றும் காதல் (1999)
•பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)
•தெனாலி (2000)
•லிட்டில் ஜான் (2001)
•பஞ்சதந்திரம் (2002)
•பம்மல் கே. சம்பந்தம் (2002)
•வசூல்ராஜா •எம்.பி.பி.எஸ் (2004)
•இதயத்திருடன் (2006)
•ஜெர்ரி (2006)
•கொல கொலயா •முந்திரிக்கா (2010)
•நான் ஈ (2012)
        கிரேஸி மோகன் ஒரு முப்பரிமாணப் பிரமுகர்! நடிகர், மரபுக் கவிஞர், ஓவியர் என மூன்று துறை வல்லுநராகத் திகழ்ந்தவர்.


   சரியாக ஓராண்டுக்கு. முன் இதே நாள். 2019 ஜூன் 10 மதியம். பலபத்திரிக்கைகளுக்கு  தொலைபேசி அழைப்புக்கள் வந்த வண்ணமிருந்தன.


`கிரேஸி மோகன் வயிற்று வலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டு சென்னை ஆழ்வார்ப் பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார், அவர் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது` என்றெல்லாம் அடுத்தடுத்துத் தகவல்கள்.


 
      கொஞ்ச நேரத்தில் மதியம் இரண்டு மணியளவில் கடைசித் தகவல் வந்து சேர்ந்தது. அவர் காலமாகிவிட்டார்!



        அதைக் கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது. முந்தின தினம் கூட அவர் நோய்வாய்ப் பட்டிருந்ததாகச் செய்தி எதுவும் வரவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவதற்கு முன்னால் கூட நன்றாகப் பேசியவர்தான்.


 
கிடுகிடுவென்று அவர் வாழ்க்கை இறுதியை நோக்கி விரைந்து சடாரென முடிந்தே போய்விட்டது. நம்ப முடியவில்லை. பலரின் கவலைகளை போக்கியவர் 40 ஆண்டுகளாக நாடக மற்றும் திரை உலகில் ஏராளமான சாதனைகளைப் புரிந்தவர். நகைச்சுவை உணர்வை வாழ்க்கை முறையாகவே கொண்டாடி, அதன்மூலம் பலரின் கவலைகளைப் போக்கியவர். 
    
         கிரேஸி மோகன் சார் உயிருடன் இல்லை. சினிமா, நாடகம், சிரிப்பு மற்றும் வாழ்க்கைக்கு என்ன ஒரு சோகமான நாள். அவரைப்போல் இன்னொருவர் இருக்க மாட்டார். நிருபர். நா.அருண், இன்றைய தேடல் வார இதழ்.