சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை பூங்கா கட்டுமான பணிகளை முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி கால்நடை பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தற்போது ரூ.1022 கோடி மதிப்பீட்டில் கால்நடை பூங்கா கட்டப்பட்டு வருகிறது.
ஆய்வுக்குப் பின்னர், முதலமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில், ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப்பூங்கா இதுதான். நூலக கட்டடம், மாணவர் விடுதிக்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. நாட்டு இன மாடுகள், நாய் இனங்கள் அழிந்து விடாமல் பாதுகாக்கப்படும்.
சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சிபிஐ விசாரணைக்கு முடிவு செய்தது குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு தெரிவிக்கப்பட்டு, அனுமதி பெற்ற பின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.