முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பு...

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனைக்குப் பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பு.


தொழில்முனைவோருக்கு தேவையான நிவாரணங்களை வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையின் அடிப்படையில் 10% நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. தொழில்துறையினரின் கோரிக்கைகளைப் பரிசீலித்து தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சியில் நவீன உணவு பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.


தமிழகத்தில் 39,999 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவைத் தடுக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கை தமிழக அரசு சரியாக பின்பற்றி வருகிறது. ஊரடங்கால் கொரோனா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்க உலக நாடுகளே திணறி வரும் சூழலில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது.


கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் 24,750 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இரண்டு கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.


9 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன்12-ல் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. குடிமராமத்து திட்டம் மூலம் 24,000 ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். 


குடிமராமத்து திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ. 498 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நபார்டு வங்கி நிதியுதவியுடன் பல்வேறு நீர் பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ரூ. 387.6 கோடி மதிப்பில் முக்கொம்பில் புதிய கதவணை அமைக்கப்படவுள்ளது.


காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அரசு அறிவித்துள்ளது.