புதுக்கோட்டை மாவட்டம் பொண்ணமராவதி திமுக ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி நேற்றிரவு மதுபோதையில் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது வளையப்பட்டி ஐந்தாம் நம்பர் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அடைக்கலமணியின் காரை நிறுத்தி விசாரணை செய்தனர்.அப்போது பணியிலிருந்த போக்குவரத்து பெண் காவலர் பிரான்சிஸ் மேரியை தகாத வார்த்தையால் பேசி அடைக்கலம் மணி மோதலில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து, மதுபோதையில் கார் ஓட்டியது , அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது மற்றும் மது போதையில் அநாகரீகமாக நடந்துகொண்டது உள்ளிட்ட பிரிவின் கீழ் போலீசார் அடைக்கலமணி மீது வழக்குப்பதிவு செய்தனர்.