தூத்துக்குடியில் உபரி ஆசிரியர்கள் விவரங்களை சமர்ப்பிக்காத பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் சம்பளம் இல்லை. கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் விவரங்களை ஜூலை 5-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கவில்லை என்றால் ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் முதல் சம்பளம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஆசிரியர்களைப் போராட்டத்திற்கு தூண்டுவதாக தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது ஆசிரியர் சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டு விடுத்துள்ளது.
ஏற்கனவே, தனியார் பள்ளிகளில் பல ஆசிரியர்களுக்கு இன்னும் சம்பளம் வரவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்து வரும் நிலையில் உபரி ஆசிரியர்கள் விவரங்களை சமர்ப்பிக்காத பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் சம்பளம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.