இந்தியா தமிழகத்தை தாக்குமா 'கதி புயல்' : வங்க கடலில் தீவிரம் அடைந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை!!
ஆம்பன் மற்றும் நிசார்கா புயலை தொடர்ந்து புதிய புயல் இந்தியாவைத் தாக்க இருக்கிறது. வங்கக்கடலில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து நாளை தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பின் இந்த தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை பெற்று 'கதி' புயலாக மாறும். கதி என்றால் வேகம். இந்த பெயர் இந்தியாவால் வைக்கப்பட்டது.
மேற்கு வங்கத்தில் கிழக்கு பகுதியில் கதி புயல் உருவாகிக் கொண்டு இருக்கிறது. தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை வட மேற்கு திசையில் நகரும். இந்த புயல் வட மேற்கு நோக்கி நகர்ந்தால் உத்தர பிரதேசம் வரை கூட செல்ல வாய்ப்புள்ளது. ஒடிசா வழியாக நாக்பூர், இந்தூர் வரை இந்த புயல் செல்ல வாய்ப்புள்ளது. அல்லது ஒடிசா அருகிலேயே இந்த புயல் வலிமை இழந்து கரையை கடக்கும். இதனால் ஒடிசாவிற்கு இன்னொரு புயல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பும் உள்ளது. ஆனால் கதி புயல் மேற்கு வங்கம் நோக்கி செல்ல வாய்ப்பு இல்லை. இந்த புயலின் வேகம் எவ்வளவு இருக்கும் என்று இன்னும் உறுதியாக கூறப்படவில்லை.
இந்த புயல் கண்டிப்பாக தமிழகத்தை தாக்க வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.