அத்தியாவசிய பொருட்கள் வாங்க வாகனங்களைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையர் வாக்கி டாக்கியில் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஜூன் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு கடும் கட்டுப்பாடுகளுடன் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. இதை மீறியதாக கூறி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 ஆயிரத்து 616 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை அனைத்தும் 12 நாள் ஊரடங்கு முடிந்த பின்னரே உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வாகனங்கள் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அனைத்து காவல்நிலையங்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் வாக்கி டாக்கி மூலம் உத்தரவிட்டுள்ளார்.