ஷியோக் ஆற்றில் மூழ்கி இரு இராணுவ வீரர்கள் பலி..!காரணம் என்ன!!.

கடந்த 48 மணி நேரத்தில், எல்லையில் மேற்கொள்ளப்படும் பாலத்தின் கட்டுமானப் பணிகளில் பங்குபெற்ற இரண்டு இந்திய வீரர்கள் லடாக்கின் ஷியோக் ஆற்றில் மூழ்கி விபத்தில் இறந்தனர்.


நாயக் சச்சின் விக்ரம் மற்றும் லான்ஸ் நாயக் சலீம் கான் ஆகிய இருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் மரணம் போர் தொடர்பானது அல்ல. அவர்களின் மறைவு எந்த வகையிலும் சண்டையோ அல்லது எதிரிகளுடனான மோதலினால் இல்லை என கூறப்பட்டுள்ளது.


நாயக் சச்சின் விக்ரம் மகாராஷ்டிராவின் மாலேகானைச் சேர்ந்தவர் மற்றும் சலீம் கான் பஞ்சாபின் பாட்டியாலாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக எல்லையில் சீன மோதல் அதிகரித்ததை அடுத்து  இந்தியா எல்லையில் மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளை அசுர வேகத்தில் முடித்து வருவது குறிப்பிடத்தக்கது.