கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் தக்காளி மார்க்கெட்டில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காத கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளி மார்க்கெட்டில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். நேற்று தேன்கனிக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன், ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில் குமார், ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் ராயக்கோட்டை பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, ஏற்கனவே எச்சரிக்கை செய்யப்பட்ட தக்காளி மார்க்கெட்டின் ஒரு கடையில் மீண்டும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மேலும், பலர் முகக்கவசங்கள் அணியாமலும் வந்திருந்தனர். அந்தக் கடையின் உரிமையாளர் பொதுமக்களிடம் சமூக இடைவெளியை அறிவுறுத்த தவறியதால் அந்த கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.