– முதலமைச்சர்
கொரோனா சிகிச்சைக்கான தொகுப்பு கட்டணங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ளார். அதில், அரசின் மருத்துவ காப்பீட்டு மூலம் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுவோர், எந்த கட்டணமும் செலுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாதவர்கள், லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தனியார் மருத்துவமனைகள் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம் எனவும் தீவிர சிகிச்சைக்கு 9 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டணம் கோரும் தனியார் மருத்துவமனைகள் காப்பீடு திட்டத்தில் இருந்து நீக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனையில் உள்ளிட்ட புகார்கள் தெரிவிக்க 1800 425 3993 என்ற தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய மருத்துவ பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனைகளும் தனியார் மருத்துவமனைகளும் சேர்ந்து செயல்பட வேண்டும் என அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டது.