ட்விட்டரில் புதிய வசதி!! முதல் ஆளாக பயன்படுத்திய ரைசா வில்சன்


பிரபல சமூக ஊடக தளமான ட்விட்டர் ஆப்பிள் மொபைல்களுக்கென்று  பிரத்யேகமாக வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஆடியோ ட்வீட் செய்யும்  வசதியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் ஆடியோ ட்வீட்டில் 140 வினாடிகள் வரை ஆடியோவைப் பதிவு செய்யமுடியும்.


பிக்பாஸ் நடிகை ரைசா வில்சன் முதன்முதலில் இந்த வசதியைப் பயன்படுத்தி ஆடியோ ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஹாய் நண்பர்களே, டைப் செய்ய சோம்பேறித்தனப்படும் நபர்களுக்கு இது சரியான தீர்வு” என்று பேசியுள்ளார்.