கொரோனாவுக்கு "ப்ரோபைலக்டிக்" மருந்து வழங்க விஜயகாந்த் வலியுறுத்தல்...


கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஹோமியோபதி, ஆயுர்வேதா அடங்கிய "ப்ரோபைலக்டிக்" மருந்தை (Prophylactic Drugs) தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு  தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை ஆகிய ஐந்து மாவட்டங்களில் மருந்து வழங்கும் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த செயல் திட்டம் சிறப்பாக வெற்றிபெறும் போது, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் இதனை விரிவுப்படுத்த எதுவாக இருக்கும். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மருந்து வினியோகம் செய்வதால், பெரிய அளவில் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படாது. எனவே, இதுபோன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் தமிழக அரசு ஈடுபட்டு, தமிழகத்தில் இருந்து கொரோனாவை நிரந்தரமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.