ஸ்ரீரங்கத்தில் கொரோனா - சிறப்பு சிகிச்சை மையம்!!..

ஸ்ரீரங்கத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதியான யாத்ரிகா நிவாஸ் கொரோனா தனிமைப்படுத்தும் சிறப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது.



திருச்சி மாவட்டத்தில் கிராமப்புறங்களை விட மாநகராட்சிப் பகுதியில் தொற்று அதிகமாக இருக்கிறது. இதன்படி, திருச்சி மாநகராட்சியில் கோட்டவாரியாக அதிகபட்சமாக ஸ்ரீரங்கத்தில் 100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோ.அபிசேகபுரம் கோட்டத்தில் 91, பொன்மலை கோட்டத்தில் 82, அரியமங்கலம் 71 என மாநகராட்சிப் பகுதிகளில் மொத்தம் 344 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், மொத்தம் 195 பேர் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 146 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


திருச்சி புறநகரில் ஒன்றிய வாரியாக மணப்பாறை 27, மருங்காபுரி 24, மணிகண்டம் 23, மண்ணச்சநல்லூர் 19, லால்குடி 14 உட்பட மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் 160 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, இவர்களில் 105 பேர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர். தற்போது 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.