தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இலேசான மழை மற்றும் கன மழைக்கு வாய்ப்பு!- வானிலை மையம்

டெல்டா மாவட்டங்களுக்கு  இன்று மழைக்கு கூடுதல் வாய்ப்பு.



(1)கன்னியாகுமரி  மாவட்டம். 


(2)திருநெல்வேலி மேற்கு தொடர்ச்சி மலை பகுதி.


(3)தென்காசி மாவட்டம் செங்கோட்டை, குற்றாலம், தென்காசி பகுதிகள். 


(4)தேனி மாவட்டம் (மேற்கு மற்றும்  வடக்கு) பெரியார், கம்பம், கூடலூர்,தேவாரம், போடிமெட்டி, போடி, உத்தமபாளையம், தேனி, அல்லிநகரம், பெரியகுளம், ஆண்டிப்பட்டி, வைகை வரை வாய்ப்பு. 


(5)கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை, பொள்ளாச்சி மேற்கு, பாலக்காடு கணவாய் கிணத்துக்கடவு வரை.வெள்ளியங்கிரி, சிறுவாணி மற்றும் மேட்டுப்பாளையத்திற்கு வடக்கே வாய்ப்பு.  


(6) நீலகிரி மாவட்டம் மேற்கு பகுதி மற்றும் கிழக்கே கொடநாடு கோத்தகிரி பகுதி வாய்ப்பு.


(7)திண்டுக்கல் மாவட்டம் :
பூம்பாறை, கொடைக்கானல், கன்னிவாடி, வத்தலகுண்டு, நிலக்கோட்டை, திண்டுக்கல், வலசை, வடமதுரை, அய்யலூர்  வாய்ப்பு. 
நத்தம் சிறுமலை பகுதிக்கும் வாய்ப்புள்ளது. 


(8)திருச்சிராப்பள்ளி மாவட்டம். மணப்பாறை, செட்டியப்பட்டி, ஏலங்கக்குறிச்சி, ஏலமனம், புதநத்தம்,கருமலை, மருங்காபுரி, வளநாடு, பாலக்குறிச்சி, துவரங்குறிச்சி தேத்தூர்  உள்ளிட்ட தெற்கு பகுதிக்கு வாய்ப்புள்ளது.


(9)புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, இலுப்பூர், கீரனூர், பொன்னமராவதி, சித்தன்னவாசல், திருமயம், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை அரிமலம், ஆலங்குடி, கறம்பக்குடி வாய்ப்புள்ளது. 


(10) தஞ்சாவூர் மாவட்டம் 
திருவோணம்,  ஒரத்தநாடு,மதுக்கூர்  தெலுங்கன்குடிகாடு, தென்னமநாடு,  தஞ்சாவூர் தெற்கு ,வாண்டையார்இருப்பு, சடையார்கோவில், நெய்வாசல்,  காவாரப்பட்டு ஆகிய பகுதி களுக்கு கூடுதல் வாய்ப்பு.



வல்லம், தஞ்சாவூர் நகரம், மரியம்மன்கோவில் சாலியமங்கலம், அம்மாபேட்டை,பட்டுக்கோட்டை, பேராவூரணி அதிராம்பட்டினம், பரக்கலக்கோட்டை , தம்பிக்கோட்டை நல்ல வாய்ப்புள்ளது 


 பாபநாசம், அய்யம்பேட்டை, கபிஸ்தலம், ராஜகிரி,சுவாமிமலை,கும்பகோணம் வரை வாய்ப்புள்ளது உறுதியல்ல


(11) திருவாரூர் மாவட்டம்  பரவலாக அனைத்து இடங்களுக்கும் வாய்ப்புள்ளது


உறுதியான வாய்ப்பு வடுவூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், கோட்டூர், திருத்துறைப்பூண்டி, கச்சனம், ஆலத்தம்பாடி, களப்பால், திருமக்கோட்டை, பரவக்கோட்டை, உள்ளிக்கோட்டை


நீடாமங்கலம், குருஸ்தலம் ஆலங்குடி,திருவாரூர்,  வலங்கைமான், குடவாசல்,நன்னிலம்  கொரடாச்சேரி,   பகுதிக்கும், ஆதிரெங்கம், பிச்சங்கோட்டகம் , எக்கல், பாண்டி, குன்னலூர், எடையூர், தொண்டியக்காடு, இடும்பாவனம், தில்லைவிளாகம், உதயமார்தாண்டபுரம், புத்தகரம், பெருகவாழ்ந்தான், சித்தமல்லி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிக்கும் வாய்ப்பு.


(12) நாகப்பட்டினம் மாவட்டம் துளசியப்பட்டினம், தாணிக்கோட்டகம்,  வாய்மேடு, தகட்டூர், தென்னாடார், பஞ்சநதிக்குளம், மருதூர், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், பன்னாள், கடிநெல்வயல், கோடியக்கரை, அகஸ்தியம்பள்ளி, வேதாரண்யம், புஷ்பவனம்,குரவப்புலம், கரியாப்பட்டினம், தலைஞாயிறு, உம்பளாச்சேரி, குருக்கத்தி,  கீழ்வேளூர், சிக்கல், நாகப்பட்டினம், திருக்குவளை, வேளாங்கண்ணி, வேட்டைக்காரனிருப்பு பகுதிகள் பெய்ய அதிக வாய்ப்பு. வடக்கே நாளை பெய்யும்.


(13) மயிலாடுதுறை மாவட்டம்  கொள்ளிடம், பழையார், திருமுல்லைவாசல், மஹேந்திரப்பள்ளி பகுதி மட்டும்,


(14) கடலூர் மாவட்டம் சேத்தியார்தோப்பு, நெய்வேலி, வடலூர், புவனகிரி, கடலூர், சாமியார்பேட்டை, பரங்கிப்பேட்டை, பிச்சாவரம், சிதம்பரம் ஆகிய பகுதிகள் வாய்ப்பு. 


(15) விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, திண்டிவனம், மயிலம், மரக்காணம் பகுதிகளுக்கு வாய்ப்பு.



(16) செங்கல்பட்டு மாவட்டம். செய்யூர், கூவத்தூர், கல்பாக்கம், மதுராந்தகம் பகுதிகள்


(17) ஈரோடு மாவட்டம் பண்ணாரி, குணறி, ஊசிமலை, பர்கூர் கூடுதல் வாய்ப்பு. 


(18) சேலம் மாவட்டம் கோட்டையூர், காவேரிபுரம்,கொளத்தூர், பூமனூர், மேட்டூர், மேச்சேரி,  தாரமங்கலம், ஓமலூர், சேலம், ஏற்காடு கூடுதல் வாய்ப்பு எடப்பாடி எடக்கானசாலை பகுதிக்கும் வாய்ப்புள்ளது.


ஜூன் 20 முதல் 26 வரை தமிழகம் எங்கும் சென்னை உட்பட  மாலை அல்லது இரவு இடியுடன் மழை பெய்யும்.


காற்று பகுதியான தாராபுரம், குண்டடம், கொடுவாய், வெள்ளக்கோயில், சின்னத்தாராபுரம், அரவக்குறிச்சி, ,  கரூர், தொட்டியம், முசிறி, திருச்சி, அய்யலூர் மேற்கு, வேடசந்தூர் வடக்கு, மூலனூர், பள்ளப்பட்டி ஆகிய பாலக்காட்டு கணவாய் காற்று பகுதி. மற்றும் கயத்தாறு, கங்கைகொண்டான், இடைசேவல், கடம்பூர், சீவலப்பேரி,  பாஞ்சாலங்குறிச்சி, ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி, சிப்பிக்குளம், வைப்பாறு ஆகிய ஆரியங்காவு கணவாய் காற்றுப்பகுதி, கூடங்குளம், உவரி, மணப்பாடு, திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டினம், காயல்பட்டினம் ஆகிய கடலோர தெற்கு காற்று பகுதி மற்றும் ராமநாதபுரம் முதல் தனுஷ்கோடி வரை இடைப்பட்ட தெற்கு காற்று பகுதி  மிகவும் குறைவாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தகட்டூர் ந.செல்வகுமார்.