தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்..


மிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போதைய நிலையில் பள்ளிகளை திறப்பது சாத்தியம் இல்லை எனவும், பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து இன்னும் இரண்டு நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.