மாணவர்களிடையே பாகுபாட்டை உண்டாக்கி மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பாழடித்துவிடக் கூடாது.
தமிழ்நாட்டில் உள்ள 1.31 கோடி மாணவர்களில், 60 சதவீதம் பேர் கிராமப்பகுதிகளில் இருக்கிறார்கள்.
இணையவழிக் கல்விக்குத் தேவையான கணினி, மடிக்கணினி, ஸ்மார்ட் போன் போன்றவை கிராமப்புற மாணவர்களிடம் இல்லை.
அடிப்படை உட்கட்டமைப்பே இல்லாத நேரத்தில், இணையவழிக் கல்வி ஆபத்தானது.
மாணவர்களுக்கு அரசு அறிவித்த கையடக்க மடிக்கணினி இதுவரை வழங்கப்படவில்லை.
இணையவழிக் கல்வி மாணவர்களுக்குத் தேவையில்லாத மன அழுத்தத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும்.
என்று எதிர்க்கட்சி தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.