கோவை ஜிஆர்டி ஜுவல்லரியில் நேற்று சீல்!! இன்று கொரோனா!!!


கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரத்தில் உள்ள கிராஸ் கட் சாலையில் உள்ள ஜி ஆர்.டி. ஜுவல்லரி ஷோரூமில் சுகாதார மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில் சென்னையில் இருந்து இ-பாஸ் இல்லாமல் 39 பெண் ஊழியர்களை அழைத்து வந்தது தெரிய வந்துள்ளது. இத்தகவலின் பேரில் சுகாதாரத்துறையினர், போலீசார் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகத்தினர் நேற்று கடையில் ஆய்வு செய்தனர். இதனால் அந்த நகைக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.



மேலும் சென்னையில் இருந்து வந்ததாகக் கூறப்படும் சுமார் 39 பணியாளர்களை தனிமைப்படுத்தினர்.  தொடர்ந்து அக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள், ஓட்டுநர்கள், காவலர்கள் போன்ற 100 பணியாளர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.