திண்டுக்கல்லில் பத்து இலக்க எண்களுடன் புதிய வாக்காளர் அட்டையை அலுவலர்கள் வீட்டிற்கே சென்று வழங்கி வருகின்றனர். வாக்காளர்களுக்கு முன்னதாக வழங்கப்பட்ட, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை 16 இலக்க எண்களை கொண்டதாக உள்ளது. தற்போது 10 இலக்க எண்களுடன் புதிய வண்ண புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, புதிய வாக்காளர் அடையாள அட்டையில் பழைய, புதிய எண் இரண்டும் இடம் பெற்றிருக்கும்.புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவருக்கும் 10 இலக்க எண் கொண்ட அட்டை வழங்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி தடைபட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் புதிய அடையாள அட்டையை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீட்டிற்கே சென்று வழங்கி வருகின்றனர்.