அமெரிக்காவில் நடந்தது போன்று ராஜஸ்தானில் மற்றொரு சம்பவம்.- அச்சத்தில் பொது மக்கள்

அமெரிக்காவில் நடந்தது போன்று ராஜஸ்தானில் மற்றொரு சம்பவம்.



 



ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே முகேஷ் குமார் என்பவர் சாலையில் முக கவசம் அணியாமல் வந்தார்.



 



அதனை கண்ட அங்கிருந்த காவலர்கள் அவரை தடுத்தி நிறுத்தி ஏன் முக கவசம் அணியாமல் வந்தாய் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் அடிதடியாக மாறிய நிலையில் முகேஷை கிழே தள்ளி அவர் கழுத்தை காலால் மிதித்து தாக்கியுள்ளார் காவலர் இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 



அமெரிக்காவில் இதே போன்று நடந்த சம்பவத்தால் அங்கு பெறும் போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.