ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் அமெரிக்க ஓப்பன் டென்னிஸ்....

மெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் ஆகஸ்ட் 31ம் தேதியில் இருந்து செப்டம்பர் 13ம் தேதி வரை நடைபெறும் என நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்துள்ளார். 



கொரோனா வைரஸால் அமெரிக்காவில் அதிகமானோர் பாதிக்கப்பட்டதால் அமெரிக்க ஓபன் டென்னிஸ் நடைபெறுவது சந்தேகம் எனக் கூறப்பட்டு வந்தநிலையில் போட்டி அமைப்பாளர்கள் திட்டமிட்டபடி போட்டியை நடத்துவது குறித்து ஜூன் மாதம் முடிவு செய்வோம் என்று தெரிவித்தனர். இதன்படி அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் ஆகஸ்ட் 31ம் தேதியில் இருந்து செப்டம்பர் 13ம் தேதி வரை நடைபெறும் என நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்துள்ளார். மேலும், போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார் .