கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கடுமையான முயற்சி எடுத்து வருகிறோம்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக கொரோனா பரிசோதனை. தமிழகத்தில் தான் கொரோனா இறப்பு சதவிகிதம் குறைவு. வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
தமிழகத்தை மண்டல வாரியாக பிரித்திருந்த நிலையில், மண்டலங்களுக்குள் நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. ஒரே மண்டலத்திற்குள் இருந்தாலும் நாளை முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை அடுத்த ஐந்து நாட்களுக்கு தடை.
மண்டலங்களுக்குள் போக்குவரத்து அனுமதியால் கொரோனா பரவுவதாக தகவல் தேவையான அளவிற்கு அனைத்து மாவட்டங்களுக்கும் டாக்டர்கள், செவிலியர்கள் அனுப்பி வைக்கப்படுவர். 30ந் தேதி வரை மாவட்டங்களுக்குள் மட்டுமே போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
சென்னையில் வீடு வீடாக சென்று கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வெளியில் வந்தால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
கொரோனா தடுப்பு பணியில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய வருவாய், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறை பணியாளர்கள், காவல், கூட்டுறவு போன்ற துறையினர், அரசு அதிகாரிகள், தன்னார்வலர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.