கொரோனா - டெல்லி அமைச்சரின் உடல்நிலை சீரியஸ்!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் உடல்நிலைக் கவலைக்கிடமாகியுள்ளது.



டந்த 17ம் தேதி காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சனை காரணமாக, டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயன், ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


இந்த நிலையில், அவருக்கு நுரையீரல் தொற்று அதிகமான நிலையில், நிமோனியா பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நிலை கவலைக்கிடமான நிலைக்கு சென்றுள்ளதால், சத்யேந்திர ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தகவல் வந்துள்ளது.