விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் கோயில்!
தற்போது இந்த கோவிலானது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 2 மாதத்திற்கு மேலாக பக்தர்கள் செல்ல தடை விதித்து மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சதுரகிரி மலை காப்பு காட்டில் அத்துமீறி நுழைந்து நீர் கொடிகளை வெட்டி நீர் அருந்தி அதை வீடியோவாக வெளியிட்ட விருதுநகர் மாவட்டம் தைலாபுரத்தை சேர்ந்த நாகராஜ் மற்றும் மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த இருவரையும் வன உயிரின காப்பாளர் முகம்மது சபாப் அவர்கள் அறிவுறுத்தலின்படி சாப்டூர் வனத்துறையினர் இருவரையும் கைது செய்தனர். இருவருக்கும் தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வனத்திற்குள் அத்துமீறி நுழைய மாட்டோம் என தோப்புகரணம் போட வைத்து நூதன தண்டனை வழங்கினர். செய்தியாளர்.மகேஷ்