லடாக் எல்லையில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து சீன செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டுமென பெரும்பாலோனார் மத்திய அரசுக்கு வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்துசீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்-டாக் ஆப் தற்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் டிக்-டாக் செயலி தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நிறுவனம் மத்திய அரசிற்கு விளக்கம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், இந்தியாவில் டிக்-டாக்கை பயன்படுத்தும் பயனாளர்களின் தகவல்களை பத்திரமாக வைத்திருப்பதாகவும், சீனா உட்பட எந்த வெளிநாட்டு அரசுகளுடனும் பகிரவில்லை எனவும் தெரிவித்துள்ளது. எங்கள் தரப்பு பதில் மற்றும் விளக்கமளிக்க அரசை சந்திக்க உள்ளோம்.