தனியார் மருந்து நிறுவனத்தில் வாயுக் கசிவு!!!


விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மருந்து  நிறுவனத்தில் நேற்று இரவு வாயு கசிவு ஏற்பட்டதால் ஊழியர்கள் 2 பேர் பலியானார்கள்.


மாநிலம் விசாகப்பட்டினத்தில் வடபகுதியில் உள்ள ஜவஹர்லால் நேரு பர்மா சிட்டி வளாகத்தில் சைனார் லைப் சயின்ஸ் எனும் தனியார் மருந்து  நிறுவனம் இயங்கி வருகிறது இந்த மருந்து நிறுவனத்தில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டது, இதையடுத்து தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றினர்.


எனினும் சிலர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது, தகவல்  அறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  இதில் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானர்கள். மேலும்  6 பேரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த சம்பவத்தை அடுத்து மருந்து நிறுவனம் மூடப்படும் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது, அதே சமயம் வேறு எங்கும் பரவ வில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து நிறுவனத்தில் இருந்து பென்சிமிடா சோல் எனும் வாயு கசிந்துள்ளது. வாயு கசிவு ஏற்பட்ட போது அந்தப் பகுதியில் 30 பேர் வரை பணியில் இருந்ததாக தெரிகிறது.