சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பில், காவல் உயர் அதிகாரிகள் மீது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பில், கூடுதல் கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளது.
சாத்தான்குளம் ஏ.டி.எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி யை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் உட்பட 3 பேர் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.