அதிமுக எம்எல்ஏ குடும்பத்திற்கு கொரோனா

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனியின் மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா.



ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம் எல் ஏ பழனிக்கு  கடந்த 13ம் தேதி கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  இந்நிலையில், தற்போது அவருடைய மனைவி மற்றும் மகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 


மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எம் எல் ஏ பழனி நலமுடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.