மத்திய  அரசின் காயகல்ப விருதை வென்றது!- மல்லாங்கிணர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்!

      மத்திய  அரசின் காயகல்ப விருதை விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர்                அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வென்றது! 


 



        விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி  அருகே  உள்ள மல்லாங்கிணர்  கிராமத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மத்திய அரசின் தூய்மை பணிக்காக வழங்கப்படும் காயகல்ப விருது கிடைத்துள்ளது.


 மருத்துவமனை வளாகம் தூய்மை, மருந்து கழிவு, மேலாண்மை, சிறந்த மருத்துவ சேவை, விழிப்புணர்வு பதாகைகள், பிரசவ அறைகள் பராமரிப்பு, சிசுக்கள் பராமரிப்பு, தொற்றா நோய் பிரிவு, மகளிர் பரிசோதனை பிரிவு, ஸ்கேன் மற்றும் சித்த மருத்துவ பிரிவு, மூலிகை தோட்ட பராமரிப்பு உள்ளிட்ட காரணிகள் ஆய்வு உட்படுத்தப்பட்ட தமிழகத்தில் 99.3 மதிப்பெண்கள் பெற்று மல்லாங்கிணர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இந்த விருதை வென்றுள்ளது.


         


          இதுகுறித்து காரியாபட்டி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் திரு.ஆரோக்கிய ரூபன் கூறும்போது, இந்த மருத்துவமனையை சுற்றியுள்ள 32 கிராம மக்களும் இங்கு தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு நாளும் 300 வெளி நோயாளிகளும் மாதத்தில் 300 உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாகவும் மாதம்  400 கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவம் பார்க்க படுவதாகவும் அதில் 60% சுகப்பிரவசம் என்றார். தூய்மை சேவையுடன் இங்கு பணிபுரியும் அனைத்து பணியாளர்களின் கடின உழைப்பால் மத்திய அரசின் காயகல்ப விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.செய்தியாளர்.மகேஷ்.