"பங்கு விற்பனை தொடர்பாக அமேசானுடன் பேச்சு நடத்தவில்லை" - பார்தி ஏர்டெல் நிறுவனம் விளக்கம்.
15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 5 சதவீத பங்குகளை அமேசான் நிறுவனத்திற்கு விற்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளியான தகவலை பார்தி ஏர்டெல் நிறுவனம் மறுத்துள்ளது. எல்லா நிறுவனங்கள் உடனான வழக்கமான உரையாடல் தான் அமெசான் நிறுவனத்துடனும் என்றும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு 30 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.