வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் பழனி..

ந்திய சீன எல்லையில் நடந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் பழனி.



 ந்தியாவிற்கும் சீனாவிற்கும் லடாக் எல்லையில் பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை உள்ளது. இந்த எல்லை பிரச்சனை இந்தியா லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக அறிவித்த பின்னர் அதிகரித்தது.

  குறிப்பாக லடாக் பகுதியில் இந்தியா பல்வேறு சாலை மேம்பாட்டு பணிகளை செய்ததுதான் சீனா ஆத்திரம் அதிகரித்து அத்துமீறலை தொடங்கியது. அடிக்கடி எல்லை தாண்டி வருவது, இந்திய வீரர்கள் மீது கற்களை வீசுவது போன்ற காரியங்களை செய்து வந்தது. இதனால் இரு தரப்புக்கும் மோதலும், கைகலப்பும் அவ்வப்போது ஏற்பட்டு வந்தது.

 கடந்த சில வாரங்களாக லடாக் எல்லையில் நிலைமை மோசமானது. இரு நாடுகளும் எல்லையில் வீரர்களை குவித்தன. பேச்சுவார்த்தை நடத்தியதால் பதற்றம் தணிந்து இருந்தது. இந்நிலையில் லடாக் எல்லையில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினர் நேற்று இரவு ராணுவ அதிகாரி உள்பட மூன்று இந்திய ராணுவ வீரர்களை கல்லால் தாக்கி கொன்றனர்.


   வீரமரணம் அடைந்த இந்த 3 பேரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த பழனி ஆவார். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்ற ராணுவ வீரரும் சீன வீரர்களின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இந்த ராணுவ வீரர் 22 வருடங்களாக ராணுவத்தில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தார். 


 இவரது உடல் நாளை சொந்த ஊரான கடுக்கலூர் கிராமத்தில் ராணுவ மரியாதையுடன் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.