தமிழகத்தின் பாரத் நெட் டெண்டர் ரத்து!!..மத்திய வர்த்தக அமைச்சகம்..


மிழகத்தின் பாரத் நெட் என்ற இன்டர்நெட் திட்ட டெண்டரை மத்திய அரசு ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. டெண்டர் விதிகளை முறையாக பின்பற்றவில்லை எனக் கூறி மத்திய வர்த்தக அமைச்சகம் ரத்து செய்துள்ளது. ரூ.1950 கோடி மதிப்பில் 12,524 கிராமங்களில் அதிவேக இன்டர்நெட் இணைப்பு தர கொண்டுவரப்பட்டது பாரத்நெட் என்னும் இண்டநெட் திட்ட டெண்டர்.  கருவிகள் கொள்முதலுக்கான டெண்டரில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்துள்ளதையடுத்து, மறுடெண்டர் விடுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.