ஓடிடி தளத்தில் இலவசமாக வெளியாகும் சுஷாந்த் சிங்கின் கடைசிப் படம்.
சுஷாந்த் சிங் நடிப்பில் உருவாகியுள்ள தில் பெச்சாரா திரைப்படம் ஓடிடி தளத்தில் இலவசமாக வெளியிடப்பட உள்ளது.
ஜூன் 14ம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பாலிவுட்டில் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக அவர் நடிப்பில் உருவாக்கப்பட்ட படம் தில் பெச்சாரா.
மே மாதம் திரைக்கு வரவேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சத்தினால் திரையிடப்படவில்லை. சுஷாந்த் சிங்கின் ரசிகர்கள் இத்திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் தில் பெச்சாரா திரைப்படம் ஓடிடி ஓடுதளத்தில் வெளியாவது உறுதியாகிவிட்டது. ஜூன் 24 ஆம் தேதியிலிருந்து ஹாட்ஸ்டாரில் இத்திரைப்படத்தை பார்க்கலாம். இதில் சிறப்பம்சம் என்னவெனில், சுஷாந்த் சிங்கின் மறைவை முன்னிட்டு ஓடிடி தளத்தில் இலவசமாக இப்படத்தைப் பார்க்கலாம் என ஹாட் ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.
முகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள தில் பெச்சாரா திரைப்படத்தில் சுஷாந்த் சிங், சைப் அலிகான், சஞ்சனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.