சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த வழக்கினை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து இவ்வழக்கினை விசாரணை செய்கிறது. தமிழக போலீஸ் டிஜிபி மற்றும் தூத்துக்குடி எஸ்பி ஆகியோர் விசாரணைக்கு காணொலி மூலம் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
போலீசார் இருவரையும் அடித்து கொன்றதாக ஊர்மக்கள் புகார் கூறியுள்ளனர்.
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்படுகிறது.