கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஐ.சி.எம்.ஆர். துணை இயக்குநர் பிரதீப் கவுர் சொல்லும் ஆலோசனை.
உடலில் இயற்கையாகவே எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாள்தோறும், புரதம் நிறைந்த பழங்கள், பச்சை தானியங்கள், காய்கறிகளை உண்ண வேண்டும் என பிரதீப் கவுர் அறிவுறுத்தி உள்ளார். யோகா, நடைபயிற்சி, வீட்டு வேலைகள் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை குறைந்தது வாரத்திற்கு 150 நிமிடம் அதாவது இரண்டரை மணி நேரம் கட்டாயம் செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.
நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும். உணவின் மூலம் போதிய வைட்டமின் கிடைக்கவில்லை என்றால், வைட்டமின்-சி மற்றும் வைட்டமின்-டி ஆகிய மாத்திரைகளை சாப்பிட வேண்டும். எது எப்படி இருப்பினும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள போதிய அளவு தூக்கம் அவசியம் என்றும் பிரதீப் கவுர் வலியுறுத்துகிறார். புகைப் பிடித்தலை கைவிட வேண்டும், புகைப் பழக்கத்தை இப்போது கைவிடாவிட்டால் வேறு எப்போதும் கைவிட முடியாது என்று குறிப்பிட்டிருப்பதுடன், உணவே மருந்து முறையில், கொரோனாவை வெல்ல முடியும் என்றும் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.