விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே டி.வேலங்குடி கிராமத்தில் கூட்டு குடிநீர் வாரியத்தில் இருந்து வரும் தண்ணீரும் ஊராட்சியில் உள்ள தொட்டியில் இருந்து வரும் குடிநீரும் 20 நாட்களாக வராமல் இருப்பதால் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அவல நிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். இச்சூழ்நிலையில் குடிநீர் பிடிக்கும்போது ஒருவருக்கொருவர் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குடிநீர் பஞ்சம்!!! காத்திருக்கும் மக்கள்..