கொரோனா சமூகப் பரவலாக மாறிவிட்டது - மு‌.க‌.ஸ்டாலின்.

மூக பரவல் இல்லை என்றால் தொற்று அதிகம் ஏன்? - ஸ்டாலின் கேள்வி.




 

   தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறியதற்கு ஆதாரம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு‌.க‌.ஸ்டாலின் கூறியிருக்கிறார். கொரோனா கொரோனாவை பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் முதல்வர் இருக்கிறார். 

 

  தொற்று அதிகரித்து வந்த நிலையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்தது வேதனையானது. அரசின் அலட்சியத்தால் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா இறப்பு விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக கூற வேண்டும். கொரோனாவால் 2 மாதங்களாக தமிழகம் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறது.

 

  அமைச்சர்கள் இடையிலான குழு சண்டையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துங்கள்.என எதிர்க்கட்சித் தலைவர் மு‌.க‌.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.