சாமானியனின் உரிமைச் சட்ட இணையதளம் அறிமுகம்!!

சாதாரண மனிதர்களும் தங்களுக்கான உரிமை சட்டத்தை அறிய புதிய இணையதளம்.



சாத்தான்குளம் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சாமானிய மக்களுக்கு சட்டம் தெரியாத காரணத்தால் அதிகாரத்தில் இருப்பவர்களின் அதிகார மீறலால் பல அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.


எனவே, சாமானிய மக்கள் தங்களின் உரிமை சட்டத்தை அறிந்து கொள்ள யூடியூப் செய்தியாளர் ராஜ்மோகன் மற்றும் அவர்களின் நண்பர்களின் உதவியோடு www.myindianrights.com என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் நமது உரிமைச் சட்டங்கள், மாவட்ட வாரியாக இலவச வழக்கறிஞர்களின் விவரம், தன்னார்வலர்களின் விவரம் போன்ற பல பயனுள்ள விஷயங்கள் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு நாட்களில் இந்த இணையதளம் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.