ப சிதம்பரம் கேள்வி!!

2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு?": ப சிதம்பரம் கேள்வி


 



 


காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் ராஜீவ் அறக்கட்டளையின் தலைவராக சோனியா உள்ளார். இதன் உறுப்பினர்களாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் பிரியங்கா, பா சிதம்பரம் உள்ளிட்டோர் உள்ளனர். இந் நிலையில் பாரதிய ஜனதா தலைவர் நட்டா, பேரிடர்களை சந்திக்கும் மக்களுக்கான பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், ராஜீவ் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். ஒரு குடும்பத்திற்கு செல்வத்திற்கான பசி நாட்டையே புண்படுத்துகிறது என விமர்சித்துள்ள நட்டா, காங்கிரஸ் செய்தது வெட்கக்கேடான மோசடி என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.



 


 


இதற்கு பதிலளிக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டு எடுக்கும் பா சிதம்பரம், 2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை அந்தமான் தீவுகளில் சுனாமி நிவாரணப் பணிகளுக்காக பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 20 லட்சம் ரூபாய் பெற்றது உண்மைதான் என்றும், ஒவ்வொரு ரூபாயும் நிவாரண பணிகளுக்கு செலவு கலைக்கப்பட்ட கணக்கு சமர்ப்பிக்க பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதில் என்ன தவறு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.