கர்நாடகா மாநிலம் பருவே கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி லக்ஷ்மிநாராயணன் நித்தூரில் உள்ள தனியார் வங்கியில் ரூபாய் 30,000 கடன் பெற்றிருந்தார். இதில் ரூபாய் 32 ஆயிரம் அரசு தள்ளுபடி செய்தது, மீதமுள்ள 3,000 ரூபாயை சில மாதங்களுக்கு முன்பு வங்கியில் செலுத்தி இருந்தார், லக்ஷ்மிநாராயணன் இந்நிலையில், வங்கி அதிகாரி அவரை தொடர்பு கொண்டு கடன் தொகையை செலுத்த உடனடியாக வருமாறு தெரிவித்தனர்.
இதனையடுத்து பேருந்து வசதி இல்லாத நிலையில் லக்ஷ்மி நாராயணனும் நடந்தே வங்கிக்கு சென்று உள்ளார், ஆனால் அவர் செலுத்த வேண்டிய தொகை வெறும் 3 ரூபாய் 46 பைசாக்கள் என்று அதிகாரிகள் தெரிவித்த உடனேயே அவர் மிகவும் கவலை அடைந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வங்கியில் இருந்து போன் செய்த உடனே வருமாறு கூறினார்கள். அதனால் பீதி அடைந்தேன் ஊரடங்கு காரணமாக பேருந்து சேவை எதுவும் இல்லை, என்னிடம் எந்த வாகனமும் இல்லை, ஒரு சைக்கிள் கூட இல்லை, நடந்தே வங்கிக்கு சென்று சேர்ந்தேன். அங்கு நான் கட்டவேண்டிய தொகை 3 ரூபாய் 45 காசுகள் என்று தெரிவித்தார்கள் வங்கியின் இந்த மனிதத்தன்மையற்ற செயல் என்னை மிகவும் காயப்படுத்தி விட்டது என்றார்.