கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் முன்பு குவாடு கிராமத்தைச் சேர்ந்த வள்ளிக்கந்தன் என்பவர் தன்னுடைய மனைவி அபிராமியை வரதட்சணை கேட்டு தினமும் மது போதையில் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனையடுத்து, தனது குழந்தைகளுடன் உளுந்தூர்பேட்டையில் உள்ள சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் படுத்துக்கொண்டு மூவரும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அபிராமி கூறினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. தகவலறிந்த காவல் ஆய்வாளர் எழிலரசி விரைந்து வந்து அபிராமி மற்றும் அவரது குழந்தைகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வள்ளிக்கந்தன் மற்றும் அவரது தாயார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனையடுத்து அபிராமி சமாதானமடைந்து தற்கொலை முடிவை கைவிட்டு அங்கிருந்து சென்றார்.
வரதட்சணை கொடுமை! நடுரோட்டில் குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி!!