அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், விரைவில் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் பணியாற்றும் போட்டோ வீடியோ கலைஞா்கள் மற்றும் பொதுமக்களுக்கு, அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்ளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம், பாடப் புத்தகங்களின் பக்கங்களை குறைக்க 18 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து, முதலமைச்சரிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக கூறினார்.