கோவில்பட்டி கிளைச்சிறையில் மேலும் ஒரு விசாரணை கைதிக்கு நெஞ்சு வலி!!


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பனைகுளத்தினை சேர்ந்தவர் ராஜாசிங்(36). இவர் கொலை வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்யப்பட்டு தூத்துக்குடி பேராவூரணி சிறையிலும், பின்னர் நெல்லை பாளையங்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டார். இதையெடுத்து கடந்த 17-ம் தேதி வழக்கு விசாரணைக்காக சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில் நேற்று நள்ளிரவில் தீடீரென ராஜாசிங்க்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையெடுத்து சிறைக்காவலர்கள் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணை கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் உயிரிழந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு விசாரணை கைதி உடல் நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.