காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றவர் திடீர் தற்கொலை முயற்சி!.


விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சித்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கலிங்கன் என்பவரின் மகன்கள் சுப்ரமணியன் மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவருக்கிடையே இடப்பிரச்சனை இருந்துள்ள நிலையில் நேற்று (16.06.2020) அ.முக்குளம் காவல் நிலையம் சென்றதாக கூறப்படுகிறது. அவர்களுடன் கிருஷ்ணனின் மைத்துனர் முருகன் என்பவரும் சென்றுள்ளார். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் முருகனை காவலர்கள் அடித்ததாக  கூறப்படுகிறது.


இதனால் மனமுடைந்த முருகன் இன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்ததால் உடனே காரியாபட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.


இதனைக் கண்டித்து முருகன் உறவினர்கள் திருச்சுழி டிஎஸ்பி சசிதரன் இடம் தாக்குதல் நடத்திய அ.முக்குளம் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர்.