மகப்பேறு நேரத்தில் மனைவியுடன் இருக்க இ – பாஸ் கிடைக்காத விரக்தியில் காஞ்சிபுரத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷவரன். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் சாயப்பட்டறை நிறுவனத்தில் தினக்கூலியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2019 ஜூன் 20 தேதி சென்னையை சேர்ந்த ராகினி என்கிற ரோஜா என்பவருடன் திருமணம் நடைபெற்றிருந்தது.
தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவால் சென்னை செல்ல இ -பாஸ் பதிவு செய்தும் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டதால் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் கடந்த 20ஆம் தேதி முதல் வருட திருமண நாள் வந்துள்ளது அன்று அவருடைய மனைவியை இருக்க வேண்டும் எனவும் நினைத்திருக்கிறார் அதுவும் முடியவில்லை.
இதன் காரணமாக நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.