கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள்!! முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்!!


சேலம் மேட்டுப்பட்டியில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். கான்கிரீட் குழாய்கள் அவ்வப்போது உடைந்து குடிநீர் வீணாவதாக மக்கள் புகார் அளித்த நிலையில், அந்த கோரிக்கையை ஏற்று இரும்பு குழாய் அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தின் மூலம், கூடுதலாக 30 லட்சம் லீட்டர் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  டிசம்பர் மாதத்துக்குள் இந்த திட்டப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.