கொலை குற்றவாளிகள் இருவர் மீது குண்டர் சட்டம்!


   திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செண்பகராஜன் என்பவரை அதே ஊரைச் சேர்ந்த ராம்குமார் (34) மற்றும் செந்தில்குமார் (36) ஆகிய இருவர் கத்தியால் குத்தி கொலை செய்தனர்.


   இதுகுறித்து அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் லாவண்யா  வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் பரிந்துரையின் பேரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி  இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து செந்தில்குமார் மற்றும் ராம்குமார் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.